100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி

உத்தமபாளையம், மார்ச் 3: உத்தமபாளையத்தில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உத்தமபாளையம் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. உத்தமபாளையம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட கம்பம், போடி, சின்னமனூர், கூடலூர் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. கம்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சக்திவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் உதயராணி முன்னிலை வகித்தார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகளை வழிநடத்தினர். ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ.சக்திவேல் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இதுபோன்ற விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது என்றார்.

Related Stories:

>