இளம்பிள்ளை, டிச. 24: காகாபாளையம் அருகே, கனககிரி செட்டியார்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (30). இவர் தனது சரக்கு ஆட்டோவில், நேற்று முன்தினம் மாலை காகாபாளையத்திலிருந்து ஆட்டையாம்பட்டி ரோட்டில் சென்றார். அப்போது, மகுடஞ்சாவடி பட்டக்காரன்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(26) என்பவர், நடு ரோட்டில் டூவீலரை நிறுத்தி கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோவில் இருந்து கனகராஜ், ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீஸ் எஸ்ஐ ஜீவிதா வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதரை கைது செய்தார்.
ஆட்டோ கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
- Ilampillai
- கனகராஜ்
- கனககிரி செட்டியார்காடு
- காகாபாளையம்
- ஆட்டையாம்பட்டி சாலை
- ஸ்ரீதரன்
- பட்டக்காரன்காடு
- மகுடஞ்சாவடி
