கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை வட்டார மருத்துவ அலுவலர் அட்வைஸ்

கலசபாக்கம், மார்ச் 2: கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அறிவுரை வழங்கினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேற்று கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

இதனைத்தொடர்ந்து கடலாடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு பேசியதாவது: கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. மேலும், தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து என்று கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

விலை மதிப்பில்லாத உயிர்களை பாதுகாத்திட கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு அச்சம் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு வட்டார மருத்துவ அலுவலர் விளக்கம் அளித்த பிறகு தொழிலாளர்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் என்று சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். முடிவில் ஊராட்சி செயலாளர் செந்தில் நன்றி கூறினார். போளூர்: போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாளஅட்டையை கொண்டுவந்து தடுப்புஊசி போட்டுக்கொல்லாம். மேலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடலில் சர்க்கரை நோய் உபாதையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை போளூர் பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ேபாளூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>