ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டிய நண்பர் கைது

 

 

பெரம்பூர், மே 14: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(28), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று மதியம் 12 மணியளவில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் கிழக்கு சாலை மார்க்கெட் அருகே தனது நண்பர் கணேஷ்(27) என்பவருடன் மது அருந்தினார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணேஷ் அருகே இருந்த மீன் கடையில் இருந்த கத்தியை எடுத்து அருண்குமார் தலையில் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அருண்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் கிழக்கு அவென்யூ சாலையைச் சேர்ந்த கணேஷ் என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: