195வது வார்டு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி

 

துரைப்பாக்கம், மே 14: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 195வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் வி.பி.ஜி அவென்யூ, சி.பி.எஸ் நகர், அன்னை அவென்யூ ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த மின்னழுத்தம் நிலவி வருவதால் வீடுகளில் உள்ள உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் பழுதடைந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் சரியாக பதில் கூற மறுக்கின்றனர். தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இப்பகுதி மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: