பெரம்பூர், மே 8: சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இவரது 14 வயது மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெண் விஜய்யை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் பெண்ணை மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த விஜய்(எ) பூரி பாபு(28) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
