காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

 

புழல், மே 9: புழல் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் தனலட்சுமி நகர் 3வது தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சக்திவேல் (18). ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சக்திவேல் இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஒரு பெண்ணிடம், தனது காதலை கூறியுள்ளார். அப்பெண், சக்திவேலின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சக்திவேல் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு, தனது அறைக்கு தூங்குவதற்காக சென்று நைலான் கயிற்றினால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தூக்கில் தொடங்கிய நிலையில் கிடந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: