அனைத்து பணிமனைகளிலும் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும்

 

சென்னை, மே 8: அனைத்து பணிமனைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என போக்குவரத்து ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 30 பணிமனைகளில் தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த பணிமனைகளில் பயணச்சீட்டு பிரிவு, கணினி பிரிவு, பணப்பிரிவு போன்ற பணிகள் அலுவலக பிரிவு பணியிடங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 10 வகுப்பு கல்வி தகுதியுடன் இந்த பணியிடங்களில் நிரப்பப்பட்டு வந்தனர். அதில் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாரிசு வேலைக்காக பதிவு செய்து கடந்த 10 வருடங்களாக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து கழகம் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்றன. எனவே, அனைத்து பணிமனைகளிலும் பணப்பிரிவு, கணினி பிரிவு மற்றும் பணப்பிரிவில் உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: