திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிர​மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

சென்னை, மே 1: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை மாத பிர​மோற்சவ விழா இன்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா 10 நாட்களுக்கு விமர்சையாக நடைபெறும் அதன்படி, இந்தாண்டு சித்திரை பிரமோற்சவ விழா, இன்று (1ம் தேதி) கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை, 3ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அன்றைய தினம் விடியற்காலை 5 மணி அளவில் கோபுர வாயிலில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். முன்னதாக நாளை (2ம் தேதி) சேஷ வாகனமும், சிம்ம வாகன புறப்பாடும் நடைபெற்று, 3ம் தேதி இரவு அம்ச வாகனத்துடன் அந்த நாள் நிறைவுபெறும். 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கே உற்சவர் தேரில் நிலை கொள்ள, காலை 7 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரவு தோட்ட திருமஞ்சனம் எனும் விசேஷ வழிபாடு நடத்தப்படும். 9ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரதான சடங்குகள் முடிவுக்கு வரும். இறுதியாக 10ம் தேதி இரவு நடைபெறும் சிறிய திருத்தேர் ஊர்வலத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Stories: