குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

மண்டபம்: தமிழக கடல் பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மணக்குடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ், வர்கீஸ், சந்தான அலோஜிஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட், சகாய செல்வ சூசை ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் மீனவர்களை இலங்கை டிக்கிவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து சென்று, நீர்கொழும்பு மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் மீனவர்கள் மீது எல்லை கடந்து வந்ததாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: