717 டாஸ்மாக் கடைகள் மூடல்; பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள 717 மதுபானக் கடைகளை, இரண்டு வார காலத்தில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நடவடிக்கைகளை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) வரவேற்கிறது.அதே சமயம், கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தின், சில்லரை மதுபான விற்பனைப் பிரிவில் பணியாற்றி வரும் சுமார் 3500 பணியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருப்பதையும், அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் என்பதை முதல்வர் கருத்தில் கொண்டு, மூடப்படும் மதுபானக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக பணி நியமனம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: