ஏற்கனவே 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்; முதல்வர் அலுவலகத்தில் மேலும் 2 செயலாளர்கள் நியமனம்

சென்னை: முதல்வர் அலுவலக செயலாளர்களாக ஏற்கனவே 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல்வராக விஜய், கடந்த 10ம் தேதி பதவி ஏற்றார். அன்றே முதல்வர் அலுவலக செயலாளராக செந்தில்குமார், லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது 3வது நிலை செயலாளராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். அதை தொடர்ந்து அரசு சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் செயலாளராக இருந்த விஷ்ணு, முதல்வரின் அலுவலக கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: