கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மயில்கள் நடமாட்டம்

கரூர், மே. 13: மயில்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் பார்த்து செல்வது வழக்கம். ஒரு சில மாவட்ட பகுதிகளில் அதிகளவு வசித்து வந்த மயில்கள் தற்போது கரூர் மாவட்ட பகுதிகளிலும் அதிகளவு கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மயில்களால் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்தாலும் பார்ப்பதற்கு அழகான பறவைகளுள் மயிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில், கரூர் தாந்தோணிமலை அருகே ஒருங்கிணைந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் அடுத்தடுத்து செயல்படுகிறது.இந்த வளாகத்தின் இருபகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மயில்கள் கூட்டம் கூட்டமாக உலா வருவதோடு, காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வளாக பகுதிகளில் வாக்கிங் செல்வோர்கள் ஆவலுடன் பார்வையிட்டும் அலைபேசியில் படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

 

Related Stories: