கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

 

கரூர், மே 22: கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 94 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன்படி கீழ் 2026-2027 கல்வியாண்டில் கரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் எல்கேஜியில் 25% சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1092 தகுதியான இடங்கள் உள்ளன. இதற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 1516 விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டுள்ளது.

Related Stories: