சாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது

தஞ்சை, பிப்.26: தொடர்ந்து மூன்றாவது நாளாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சங்கிலிமுத்து , துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், கிருஷ்டி, ஒரத்தநாடு பிரபாகரன், கஸ்தூரி தஞ்சை ராதிகா, திருவோணம் ராஜரெத்தினம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் 57 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>