மாற்றுத்திறனாளிகள் 20 பேர் கைது

நாகர்கோவில், பிப்.26: கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போன்று மாற்றுத் திறனாளிகளின் மாத உதவித் தொகையை R3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான ஊனமுற்றோருக்கு R5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளில் 5 சதவீத பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில்  இரண்டாவது கட்டமாக மீண்டும் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தங்க குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமார், அருள், நிர்வாகிகள் கணபதி, மிக்கேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி 20 பேரை கைது செய்தனர். இதனை போன்று விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற்றது.

Related Stories: