அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி, பிப். 26 :தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நான்காம் நாளாக நேற்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.  மாவட்டத் தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் நாகலட்சுமி, வளர்மதி, அன்பரசி முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது, அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த ஓய்வின்போது வழங்கப்படும் நிதியை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.7 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மதிய நேரத்தில் போராட்டம் நடத்திய இடத்திலேயே அமர்ந்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

Related Stories: