முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

புதுக்கோட்டை, பிப்.25: 38 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். போராட்டத்தை ஆதரித்து சிஐடியூ மாவட்டச் செயலாளர் தர் உள்ளிட்டோர் பேசினர்.

Related Stories:

>