வேலூர் ஆப்காவில் கேரள சிறைத்துறை டிஜிபி பேச்சு மற்றவர்கள் சிரிப்பார்கள் என நினைக்ககூடாது

வேலூர், ஏப்.29: கேள்வி கேட்பதை நிறுத்தினால் புதிய விஷயங்களை கற்றுக்ெகாள்வது நின்றவிடும் என்று வேலூர் ஆப்காவில் சிறை அதிகாரிகளுக்கு 3 மாத பயிற்சியில் கேரள சிறைத்துறை டிஜிபி பேசினார். வேலூர் ஆப்காவில் 49வது அணிக்கான சிறை அதிகாரிகளுக்கு 3 மாத பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கோவிந்தராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கேரள மாநில சிறைத்துறை டிஜிபி பல்ராம்குமார் உபாத்யா பங்கேற்று பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: ஆப்கா தேசிய அளவிலான அகாடமியாக மாற வேண்டும் என்பது எனது கனவு.

ஆனால் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இந்திய அரசு நிதி வழங்கியும், நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. ஆப்காவில் உட்கட்டமைப்பு வசதி, பயிற்சியின் தரத்தை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்க உள்ளது. இங்கிருந்து பயிற்சி பெற்று செல்பவர்கள், தேசிய அளவிலான நிறுவனத்தில் கற்றோம் என்ற மதிப்பை பெற வேண்டும். இதில் பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகள், பயிற்சியாளர்களிடம், கருத்துகளை வழங்க வேண்டும்.

எந்த ஒரு புதிய விஷயங்களையும், கற்பிக்காமல் ஏற்கனவே தெரிந்தவற்றை மீண்டும் மீண்டும் கூறினால் எந்த பயனும் இல்லை. கேள்வி கேட்க யாரும் தயங்ககூடாது. ஏதேனும் கேள்வி கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்கள் என நினைக்ககூடாது. நமது சந்தேகங்களை தீர்க்கவே, கேள்விகள் கேட்க வேண்டும். ேகள்வி கேட்பதை நிறுத்தினால், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது நின்று விடும். எந்த விஷயத்தையும் கடமையாக செய்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஜூனியர்கள், சீனியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். சிறிய சந்தேகம் இருந்தாலும் கேட்க வேண்டும். கல்வி என்பது கேள்வி பதில் முறையை அடிப்படையாக கொண்டது. கல்விமுறை என்பது அறிவை தருவதற்கான ஆர்வத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார். இந்த பயிற்சியில், தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர், கர்நாடகாவை சேர்ந்த 5 பேர், ஆந்திராவை சேர்ந்த 11 பேர், கேரளாவை சேர்ந்த 5 பேர், தெலங்கானாவை சேர்ந்த 6 பேர் என 32 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

Related Stories: