ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில்

வேலூர், ஏப்.22: 3 நாள் டாஸ்மாக் மூடல் எதிரொலியாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாள் நாளை (23ம் தேதி) வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மதியம் முதலே மதுபிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும் வேலூர், திருப்பத்தூர் உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் ரூ.9.50 கோடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6.50 ேகாடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு விற்பனையானதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: