தமிழகத்தில் 98 சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட

வேலூர், ஏப்.25: மாநிலம் முழுவதும் 98 சீனியர் சிவில் நீதிபதிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு: வேலூர் முதன்மை சார்பு நீதிபதி ஜே.பாரதி, ராணிப்பேட்டை சார்பு நீதிபதியாகவும், தூத்துக்குடி முதன்மை நீதித்துறை நடுவர் ஆர்.வி.ராஜகுமார், வில்லிபுத்தூருக்கும், சென்னை 3வது சிட்டி சிவில் கோர்ட் உதவி நீதிபதி கே.நம்பிராஜன், திருவள்ளூர் முதன்மை நீதித்துறை நடுவராகவும், உசிலம்பட்டி சார்பு நீதிபதி பி.எஸ்.ருஸ்கின்ராஜ், நாங்குனேரிக்கும், சென்னை 4வது சிட்டி சிவில் கோர்ட் உதவி நீதிபதி கே.சிவசக்திவேல் கண்ணன், சென்னை 1வது சிட்டி சிவில் கோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி, வாணியம்பாடிக்கும், கள்ளக்குறிச்சி முதன்மை சார்புநீதிபதி எஸ்.மைதிலி, திருப்பத்தூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்துக்கும், திருவண்ணாமலை முதன்மை சார்பு நீதிபதி எம்.சாதிக்பாஷா, விருத்தாசலத்துக்கும், சென்னை 12வது உதவி நீதிபதி பி.சுதா-II திருவண்ணாமலை முதன்மை சார்பு நீதிபதியாகவும், வாணியம்பாடி சார்பு நீதிபதி பி.ராஜா, பழனிக்கும், வேலூர் கூடுதல் சார்பு நீதிபதி ஆர்.தமிழ்செல்வி, வேலூர் முதன்மை சார்பு நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 98 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக சென்னை உயர்நீதிமன்ற பொது பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: