பெண்கள் அச்சமின்றி வாக்களிக்க ‘பிங்க்’ வாக்குச்சாவடி அமைப்பு பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு குடியாத்தம் அடுத்த பெரும்பாடி ஊராட்சியில்

குடியாத்தம் ஏப் 23 : பிங்க் வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, பெண் அலுவலர்கள் மட்டுமே நிர்வகிக்கும் சிறப்பு வாக்குச்சாவடி ஆகும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் முன்னிட்டு குடியாத்தம் சட்டமன்ற (தனி) தொகுதியில் பெரும்பாடி ஊராட்சியில் மகளிர் வாக்களிக்கும் வகையில் பிங்க் வண்ணத்தில் அலங்கரித்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பாதுகாப்புப் பணியிலும் பெண் காவலர்களே ஈடுபடுகின்றனர். தேர்தல் அலுவலர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என அனைவரும் பெண்களாகவே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘பிங்க்’ வண்ணம் பூசப்பட்டு, தோரணங்கள் மற்றும் அலங்காரங்களுடன் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘பெண் வாக்காளர்களை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை வலியுறுத்துதல், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலில் வாக்களிக்கச் செய்தல். பெண்கள் அச்சமின்றி, எளிதாக வாக்களிக்க முன்முயற்சிகளாக இந்த வாக்குச்சாவடி உதவுகின்றன. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்படுகின்றன என தெரிவித்தனர்.

Related Stories: