போச்சம்பள்ளி, ஏப்.29: போச்சம்பள்ளி வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராமங்களை சேர்ந்த 103 விவசாயிகள் மற்றும் கொப்பரை உற்பத்தியாளர்கள் 9.104 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். ஏலத்தில் கொப்பரை கிலோ அதிகபட்சம் ரூ.153க்கும், குறைந்தபட்சம் ரூ.76.99க்கும், சராசரி விலையாக ரூ,150.69க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த கொப்பரை 12 லட்சத்து 67 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து போச்சம்பள்ளி வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகைியல், தேசிய மின்னணு வேளாண் சந்தை (இநாம்) முறையில், விவசாயிகளின் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனர். கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கிறது. கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது மேலும், பருத்தி, நெல் ஏலமும் நடைபெற உள்ளதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம் என்றார்.
