இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கு 30 நாள் இலவச பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி கலைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி கலைப்பயற்சி வழங்கப்படுகிறது. 5ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் நாளை 24ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.

பயிற்சியின் போது, சீருடை மற்றும் காலை- மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டிடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி. 9080676557, 9025254260 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: