நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஏப்.22: கிருஷ்ணகிரியில் நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் மகேஸ்வரி பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி நகராட்சி அலுவலகத்தில் துவங்கி, காந்திசாலை, டவுன் பஸ் ஸ்டாண்ட், தர்மராஜா கோயில் சாலை வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். நிகழ்ச்சியில், வருவாய் அலுவலர் சர்வேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: