போச்சம்பள்ளி, ஏப்.21: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் தணிகைவேலன் மற்றும் நிர்வாகிகள் போச்சம்பள்ளி, பாரூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் எம்எல்ஏ குறித்து, உண்மைக்கு புறம்பாக மற்றும் அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளை கொண்ட போஸ்டர்களை போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் ஒட்டி உள்ளனர். மதியழகன் எம்எல்ஏ மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நபர்களால், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம். குள்ளனூர், ஒட்டத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவதூறு சுவரொட்டி காணப்படுகிறது. அதனை அச்சிட்ட பிரசுரத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, சட்டத்திற்கு புறம்பான வகையில் போஸ்டர் ஒட்டிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
முக வேட்பாளரை தவறாக சித்தரித்து சுவரொட்டி
- போச்சம்பள்ளி
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
- DMK அது
- துணை ஒருங்கிணைப்பாளர்
- தனிகைவேலன்
- பரூர் காவல் நிலையம்
- திமுக
- பர்கூர்
- மதியழகன்…
