கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குப்புசாமி, அதிமுக சார்பில் தமிழ்செல்வம், நாதக சார்பில் மேகலா, தவெக சார்பில் இளையராஜா உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மதியழகன் எம்எல்ஏ, அதிமுக சார்பில் கோவிந்தராசன், நாதக சார்பில் கவின்குமார், தவெக சார்பில் ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லக்குமார், அதிமுக சார்பில் அசோக்குமார், நாதக சார்பில் சுகந்தி, தவெக சார்பில் முகுந்தன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர்.
அதே போல், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சீனிவாசன், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, நாதக சார்பில் நாகராஜ், தவெக சார்பில் சம்பங்கி உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சத்யா, அதிமுக சார்பில் பாலகிருஷ்ணாரெட்டி, நாதக சார்பில் ஸ்டாலின், தவெக சார்பில் வேந்தர்க்கரசன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர். தளி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமசந்திரன், பாஜ சார்பில் நாகேஷ்குமார், நாதக சார்பில் நரசிம்மாரெட்டி, தவெக சார்பில் அஜித் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடுகின்றனர்.
