கிருஷ்ணகிரி புளி கமிஷன் மண்டிகளில் காங்., வேட்பாளர் பிரசாரம்

 

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர். செல்லக்குமார், தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள புளி கமிஷன் மண்டிகளில், கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், திமுக ஆட்சியின்போது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மையான சாலைகள் கான்கிரீட் சாலையாக போடப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, ஓசூர் -ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்திற்கு 11 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: