விஐடி பல்கலை. – டாடா மோட்டார்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்பு

வேலூர்: விஐடி பல்கலைக்கழகம்- டாடா மோட்டார்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள், 2026-27ம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் பி.டெக். உற்பத்தி பொறியியல் பட்ட படிப்பை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் முன்னிலை வகித்தார். விஐடி பதிவாளர் ஜெயபாரதி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்வில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார், உதவி இயக்குநர் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையர் பி.குப்பன் மற்றும் புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் சப்தே அமித் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் செயல்பாட்டு பிரிவின் துணை தலைவர் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளர் நீரஜ் அகர்வால், மனிதவள பிரிவு பொது மேலாளர் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளர்கள் ரங்கா குந்தி மற்றும் மார்ஷல் பெர்னாண்டஸ், வளாகத் திட்டப் பிரிவு தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளர் அபியுதய் திவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: