மும்பை: எல்ஐசி நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு புதிய மொபைல் ஆப்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர், எம்.நாகராஜூ, எல்ஐசியின் மை எல்ஐசி மற்றும் சூப்பர் சேல்ஸ் சாதி ஆகிய ஆப்ஸ்களை (செயலிகளை) வெளியிட்டார். இந்த நிகழ்வில் எல்ஐசியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர். துரைசாமி, நிர்வாக இயக்குநர்கள் தினேஷ் பந்த், ரத்னாகர் பட்நாயக், ஆர். சந்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மை எல்ஐசி (MyLIC) என்ற ஆப்சில் வாடிக்கையாளர்கள் தங்கள் அனைத்து எல்ஐசி பாலிசிக்களையும் இதில் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஆப்ஸ் மூலமாகவே பிரீமியம் கட்டலாம். பாலிசி பயன்கள் மற்றி அறிந்து கொள்ளவும், பாலிசி மூலம் கடன் பெறவும் இதில் வசதி உள்ளது. மேலும், பாலிசியில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி காலாவதியான பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளவும் இந்த ஆப்சில் வதிகள் உள்ளன.
இதுபோல் சூப்பர் சேல்ஸ் சாதி (Super Sales Saathi) என்ற ஆப்ஸ், எல்ஐசி ஏஜென்ட்களுக்கானது. பாலிசி விற்பனைக்கான டிஜிட்டல் கருவியாக இதனை ஏஜென்ட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் போட்டுள்ள பாலிசிக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.
இதுபோல் பாலிசி தொடர்பாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான நினைவூட்டல்கள், வாடிக்கையாளர்களுடனான ஒருங்கிணைந்த தொடர்பு, ஏஐ தொழில்நுட்ப உதவியால் வாடிக்கையாளர்களுடனான மதிப்பை மேம்படுத்துதல் பாலிசி பயன்களை எளிதாக விளக்க உதவும். தங்கள் இலக்கு எட்டப்பட்டுள்ளதா என்னும் எவ்வளவு பாலிசி விற்பனை செய்ய வேண்டும் என்பதை கண்காணித்துக் கொள்ளவும் இந்த பாலிசி உதவும் என எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
