சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து ஏப்ரல் 29ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கபல்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினராக, 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 5 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.முரளி, எஸ்.சசிகுமார், ஏற்காடு மோகன்தாஸ் உள்ளிட்ட 13 பேரும், செயலாளர் பதவிக்கு எஸ்.காமராஜ், எஸ்.அறிவழகன், இ.பழனி உள்ளிட்ட 9 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு ஜி.ராஜேஷ், வி.ஆனந்த், வி.இ.அனிஷ்குமார் உள்ளிட்ட 6 பேரும், நூலகர் பதவிக்கு ஆர்.எம்.பிரதீபன், எஸ்.ஜிம்ராஜ் மில்டன், வி.எம்.ரகு, முனைவர் பி.போத்ராஜ் உள்ளிட்ட 7 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சாம் ஆர்தர் ஜெபக்குமார், ஓ.ராமன் உள்ளிட்ட 49 பேரும், இளம் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கஜலட்சுமி, அன்பரசன், கார்த்திக் உள்ளிட்ட 26 பேரும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 115 பேர் போட்டியிடுகிறார்கள்.
