நீலகிரியில் பணம், ரூ.10 ஆயிரம் கூப்பன் பறிமுதல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பாலர்வாடி பகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின்படி தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சேரம்பாடி பகுதியை சேர்ந்த சுபாஸ் என்பவரிடமிருந்த ரூ.79 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் கூப்பன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்த பணம் மற்றும் கூப்பன் என தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் மற்றும் கூப்பனை கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Related Stories: