அரவக்குறிச்சி, ஏப். 18: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துமேடு சோதனைச் சாவடியில்ல் பறக்கும் படைக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரவக்குறிச்சியிலிருந்து பாளையம் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர். அதில், அரவக்குறிச்சி வட்டம், வெங்கிடாபுரம் கிராமமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் ரூ.86,000/ இருந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி மேற்படி தொகையை பறக்கும் படைக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.86,000/- தொகை அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட தொகையை மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
