லால்குடி ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் வாக்கு சேகரிப்பு

லால்குடி, ஏப்.16: லால்குடி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் லால்குடி தெற்கு ஒன்றியம் மணக்கால் மற்றும் கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், கொன்னைக்குடி, அன்பில், பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நடராஜபுரம் பகுதியில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் அருண் நேரு தலைமையில் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் நடிகர் ரவி மரியா, செய்தி தொடர்பாளர் சசிரேகா, தொகுதி பொறுப்பாளர் சிவபதி, ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், அசோகன், அருணகிரி, சிவகுமார், முன்னாள் எம்எல்ஏ பாலன், கலந்து கொண்டு பேசினர்.

வேட்பாளர் லீமா ரோஸ் பேசுகையில்: லால்குடி சட்டமன்ற தொகுதியை சிறந்த தொகுதியை மாற்றுவேன் எனது நிர்வாகத்தின் சி.எஸ்.ஆர் நிதியில் பல்வேறு திட்டங்கள் மூலம் பகுதி மக்களுக்கு படித்து முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரம், உயர் கல்வி முடித்தவர்களுக்கு ஐஏஎஸ் அகடாமி அமைத்து பயிற்சி, அனைத்து ஊராட்சிகளிலும் சமுதாய கூட்டம் அமைத்து தரப்படும் எடப்பாடி அறிவித்த தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்ற படுவேன் என்றார். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தர்மதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பு செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் கூட்டணி கட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: