திருவெறும்பூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் திமுகவுக்கு ஆதரவு

திருவெறும்பூர், ஏப்.16: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முத்தரையர் அரசியல் களம் அமைப்பின் வேட்பாளர் சுப்புலட்சுமி(சுயேட்சை) திமுக வேட்பாளர் அன்பில் மகேஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முத்தரையர் அரசியல் களம் அமைப்பின் சார்பில் சுயேட்சை வேட்பாளராக, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட களம் இறங்கியுள்ள சுப்புலட்சுமி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் இனி வரும் நாட்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போவதில்லை, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தனது முழு ஆதரவை வழங்க உள்ளேன். காரணம் தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, தனது ஆதரவாளர்களும், முத்தரையர் அரசியல் களம் அமைப்பினரும் அன்பில் மகேஷ் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: