லால்குடி, ஏப்.9: லால்குடி அடுத்த குமுளூர் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் குழுளூர் வேளாண்மை கல்வி நிறுவன பட்டயப்படிப்பு மாணவ, மாணவியர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் 100 சதவிகித வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சங்குறிச்சி கிராமத்தில் கடந்த 7ம்தேதி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் வேளாண்மை கல்வி நிறுவன முதல்வர், முனைவர் அசோகன் முன்னிலை வகித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. வேளாண்மை கல்வி நிறுவன பேராசிரியர்கள், தச்சங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் வாக்களிப்பினை உறுதி செய்யும் வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் முழக்கமிட்டபடி மாணவ, மாணவிகள் சென்றனர்.
