திருச்சி, ஏப்.11: உருமு தனலட்சுமி கல்லூரியின் 56வது கல்லூரி நாள் விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு) டாக்டர் விஜயா சுந்தரி வரவேற்றார். அறிக்கையை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் வாசித்து விழாவை தொகுத்து வழங்கினார்.
முதன்மை விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் கு.ராதாகிருஷ்ணனை கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் சு.கந்தசாமி அறிமுகப்படுத்தி கவுரவித்தார். விழாவில் கல்லூரி தலைவர் டாக்டர் எஸ்.ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குனர் டாக்டர் என்.எஸ்.சிவகுமார் மற்றும் சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் மு.கல்யாணசுந்தரம், செயலாளர் கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதன்மை விருந்தினருடன் இணைந்து கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் டாக்டர் கு.மேனகா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பால்ராஜ் செய்திருந்தார்.
