முசிறி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு பேரணி

முசிறி, ஏப். 10: முசிறி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சமரசத் தீர்வு நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருச்சி மாவட்டம், முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் முசிறி கைகாட்டியில் சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு பேரணியை சார்பு நீதிபதி முருகானந்தி நேற்று தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமை இயல் நீதிபதி சவித்ரா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அழகு பத்மா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமரச தீர்வர்கள் தங்கதுரை, கதிரேசன், எம் ஜி ராஜன், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி ஆகியோர் சமரச தீர்வின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர். முசிறி கைகாட்டியிலிருந்து பேரணியாக சார்பு நீதிமன்றம் வரை வந்தனர். அப்போது சமரச தீர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற, அலுவலர்கள் தனியார் கல்வி நிறுவன மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: