போக்சோ வழக்கில் கைதான கட்டிட மேஸ்திரி மீது பாய்ந்தது குண்டாஸ்

திருச்சி, ஏப்.11: திருச்சியில் போக்சோ வழக்கில் கைதான கட்டிட மேஸ்திரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். சிறுமியின் தாயார் கட்டிட தொழிலாளி. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (60) என்ற கட்டிட மேஸ்திரி சிறுமியின் தாயாரிடம் வீடு கட்டி தருவதாக கூறி பழகி வந்ததாக தெரிகிறது. நாளடைவில், அப்பெண்ணின் மகளிடம் ஆசையாக பழகி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் மார்ச் 14ம் ேததி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து ஜானகிராமன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அச்சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் ஜானகிராமன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் உள்ளவரிடம் சார்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போது வரை மொத்தம் 42 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மத்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories: