ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.
