சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.கொள்கை நிலைப்பாடுகளை முதன்மையாக வைத்து கொள்கை அறிக்கையாக வெளியிடுகிறோம். தேர்தல் நடைபெறும்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது அப்பட்டமானது. பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.
16,17,18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. 3 நாட்களும் எதை விவாதிக்கப் போகிறோம் என்பது குறித்து பாஜக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட்டத் தொடரை நடத்துவதால் ஐயம் ஏற்படுகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்;
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை வலியுறுத்துகிறோம்.
தேர்தலின்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது மரபுக்கு எதிரான நடவடிக்கை
பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக எங்களின் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறோம்
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்
சிறுபான்மையினரை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
ஆணவக்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றத்துக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
