குறிஞ்சிப்பாடி: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
