ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன் என்றவர் அண்ணல் அம்பேத்கர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

வேலூர்: ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன் என்றவர் அண்ணல் அம்பேத்கர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து உள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. 1891-ல் பிறந்த அவர், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தலித் மக்களின் உரிமைக்காகப் போராடிய மாபெரும் தலைவர்.

தமிழ்நாட்டில் இந்த நாள் ‘சமத்துவ நாள்’ ஆக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1990-ல் இவருக்கு வழங்கப்பட்டது..

அண்ணல் அம்பேத்கரின் 136வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் விருதம்பட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!

Related Stories: