மும்பை: பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்
மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு இன்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாகத் திரையுலகை ஆட்சி செய்தவர்.
1943-ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய ‘வாடி வாடி கைப்படா கத்திரி’ (அல்லி அர்ஜுனா) மற்றும் ‘செப்டம்பர் மாதம்’ (அலைபாயுதே) போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. 2000-ம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய ‘தாதாசாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. மேலும், 2008-ல் ‘பத்ம விபூஷன்’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். ஆஷோ போஸ்லே அவர்களுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
