மக்களுக்கும் எடப்பாடி துரோகம் செஞ்சுட கூடாதுன்னு தான் அரசியலுக்கு வந்தேன்: சசிகலா ஆவேசம்

தென்காசி சட்டமன்ற தொகுதி அஇபுதமமுக வேட்பாளரை ஆதரித்து சுரண்டையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எனக்கு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு செய்து விடக்கூடாது என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

காவல்துறையினர் தனது கடமையை சரியாக செய்ய வேண்டும். தமிழகத்தின் கடன் சுமையை குறைக்கவும், வெளி மாநிலத்திற்கு செல்லும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். என்றார். தொடர்ந்து கழுநீர் குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: