முடிச்சு விட்ட ப.சிதம்பரம்: பேசாம போறதுக்கு எதுக்கு கட்சி…? சினிமாவுக்கே விஜய்ய அனுப்புங்க…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனி பகுதியில் காங். வேட்பாளரை ஆதரித்து, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:ஒரு கட்சியின் தலைவர் (விஜய்) எல்லா இடத்திலும் வேட்பாளர் நிறுத்தியுள்ளார், தனியாக நிற்கிறார். காரைக்குடி போன்ற மாநகரத்துக்கு வருகிறார். பேசாமல் போனால், எதுக்கு அரசியல் கட்சி? அவர் எழுதுவது கிடையாது, பேசுவது கிடையாது.

பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால் தேர்தலில் வேலை கிடையாது. வேறு களத்தில் இருப்பவர், தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். அவரை தேர்தல் களத்தில் இருந்து விடைகொடுத்து பழைய களத்துக்கு (சினிமாவுக்கு) அனுப்புங்கள். திமுகவுக்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி. இரண்டும் வலிமையான கூட்டணி. அமமுக ஒரு கட்சியே அல்ல. அமமுக கட்சிக்கு என ஒரு வரலாறு இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அமமுகவிற்கு டிடிவி.தினகரன் தலைவர்.

சசிகலா, டிடிவி.தினகரனை மீறி அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனதால், அவர் எங்கள் எதிரி. அவரை ஒழிக்காமல் அதிமுகவை கைப்பற்றாமல் நாங்கள் ஓயமாட்டோம் என கூறினார்கள். கடந்த 39 நாட்களுக்கு முன் வரை எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் விடமாட்டோம். எடப்பாடிதான் எங்கள் எதிரி, அவர் விரோதி, அவரை ஒழிக்காமல், அவரை நீக்காமல், கட்சியை கைப்பற்றாமல் நாங்கள் ஓய மாட்டோம் என சொன்னார்கள்.

ஆனால் பாஜவுடன் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து விட்டார். அவர் முதலில் செய்தது துரோகம், பாஜவுடன் சேர்ந்தது இரட்டை துரோகம். எனவே அவரை ஒழிக்காமல் ஓய மாட்டோம் என கூறினார்கள். இன்று ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி, மறுபுறம் பாஜவை வைத்துள்ளார்கள். இது ஒரு கட்சியா? 8 இடங்களில் தான் நிற்கிறார்கள். அதிமுக, பாஜ நேரடியாக காரைக்குடியில் போட்டியிட அச்சப்படுகிறது. இங்கு இருந்த அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் என்ன செய்தார்கள்? இவ்வாறு கூறினார்.

Related Stories: