அண்ணாமலை செங்கல் உருவி கிடக்குது; டவுசர் போட சொல்லுங்க: செந்தில் பாலாஜி கலாய்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் கட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி பாஜவை சேர்ந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. 2வது முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க தயாராக உள்ளார்.

இரட்டை இன்ஜின் அரசு பற்றி பேசி வரும் பாஜவினர் இரட்டை இன்ஜின் அரசு இருந்த புதுச்சேரியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஒன்றிய அரசின் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்று ஒன்றிய அமைச்சர் கூறி வருகிறார். எந்த நிதியை பயன்படுத்தவில்லை, எவ்வளவு நிதி கொடுத்தார்கள். கல்விக்கு நிதி கொடுத்தார்களா, 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை கொடுத்தார்களா, ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 29 பைசா திருப்பி கொடுக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தமிழில் பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் தமிழக மக்களை மறந்து விடுவார்கள். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் வரை அண்ணாமலை மற்றும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தினமும் செய்தியாளர்களை சந்திப்போம், அது திமுக வெற்றியை தடை செய்யும் என கூறியுள்ளார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாபெரும் ஆதரவு இருக்கிறது. மாநில பொறுப்பில் இருந்த அண்ணாமலை அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவுவேன் என்றார். இப்போது அவரது செங்கல் உருவி கிடக்கிறது. அவரை டவுசர் அணிந்து வேலை செய்ய சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: