சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்ட போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில், சென்னையின் எப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஈஸ்ட் பெங்கால் வீரர்கள் அதிரடியாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். 7வது நிமிடத்தில் அந்த அணியின் எட்மன்ட் லால்ரின்டிகா முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக, சென்னை அணியின் இர்பான் யாத்வாத் 28வது நிமிடத்தில் கோல் போட்டார். இருப்பினும் கடைசி கட்டத்தில் அட்டகாசமாக ஆடிய ஈஸ்ட் பெங்காலின் பிபின் சிங் 83வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 90+6வது நிமிடத்திலும் இரு கோல்கள் போட்டனர். அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
