ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.55.50 உயர்வு: விமான பெட்ரோலுக்கு ரூ.42

புதுடெல்லி: டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.55.50 ஆக ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. மேலும் உலக நாடுகளுக்கு தேவைப்படும் எரிபொருள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டிலும் எரிபொருள் விலை உயர்ந்துவருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.55.50 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரியை லிட்டருக்கு ரூ.42 ஆகவும் உயர்த்தி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வரி உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு மார்ச் 26 அன்று டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.50 மற்றும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.29.50 என ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு விதித்திருந்தது. தற்போது மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: