புதுடெல்லி: டெல்லியில் நடந்த, இந்திய மத்தியஸ்த கவுன்சிலின் சர்வதேச மாநாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா கலந்து கொண்டு பேசியதாவது: விசாரணை நீதிமன்ற அளவில் எந்தவொரு நீதிபதிக்கும் நாள்தோறும் 400 முதல் 500க்கும் குறைவான வழக்குகளை கொண்ட பணிப்பட்டியல் இருப்பதில்லை. உயர்நீதிமன்றங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. நீதிபதிகள் நீதிமன்றதுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு அமர்ந்து தங்கள் முன் பட்டியலிட்டுள்ள வழக்குகளை விசாரிக்க வேண்டிய கடமை இருந்தாலும், வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர்களால் எப்போதும் சுருக்கவோ, கட்டுப்படுத்தவோ முடிவதில்லை. வழக்குகள் தேக்கமடைவதற்கும் நீதிபதிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.நீதிமன்ற விசாரணைகளின் கால அளவு பெரும்பாலும் வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களின் நீளத்தையே சார்ந்திருக்கிறது. இதுவே இறுதியில் வழக்குகள் முடித்து வைக்கப்படும் வேகத்தை பாதிக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கு நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகளை மட்டும் குறை கூறாதீர்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் கருத்து
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- அஹ்சானுதீன்
- புது தில்லி
- சர்வதேச நடுவர் மன்ற மாநாடு
- இந்தியா
- தில்லி
- அஹ்சானுதீன் அமானுல்லா
